சோம்ப்ஸ்-எலிசேயில் கைது செய்யப்பட்ட பாடகர் Kalash!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ்எலிசேயில் கைது செய்யப்பட்ட பாடகர் Kalash!

சொல்லிசை பாடகர் Kalash மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்ற இரவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
சோம்ப்ஸ்-எலிசேயில் பல்வேறு வாகனங்கள் மீது மோதியவாறு சென்ற குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடம்பர மகிழுந்தான Porsche இல் பயணித்த அவர், பல்வேறு வாகனங்களை மோதி தள்ளியுள்ளமை பல்வேறு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. அதேபோல் அவர் கைது செய்யப்படும் காணொளிகளும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 
 
Kalash முன்னதாக 2014 ஆம் ஆண்டில் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரின் உண்மையான பெயர் Kévin Valleray என்பதும் இவருக்கு தற்போது 30 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை