அயர்லாந்துடன் டெஸ்ட் ஆப்கானிஸ்தானுக்கு 147 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
அயர்லாந்துடன் டெஸ்ட் ஆப்கானிஸ்தானுக்கு 147 ரன் இலக்கு

டேரா டூன்: அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான், முதல்  இன்னிங்சில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷஷாத் 40, ரகமத் ஷா 98, ஹஸ்மதுல்லா 61, கேப்டன் அஸ்கர் ஆப்கன் 67 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 142 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி நேற்று 288 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது (93 ஓவர்). பால்பிர்னி அதிகபட்சமாக 82 ரன் விளாசினார்.  கெவின் ஓ பிரையன் 56, ஜேம்ஸ் மெக்கல்லம் 39, டாக்ரெல் 25, முர்டாக் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரான் டோ 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கன் பந்துவீச்சில் ரஷித் கான் 5, யாமின் 3, சலாம்கெய்ல் 2  விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்துள்ளது. கை வசம் 9 விக்கெட் இருக்க, அந்த அணி வெற்றிக்கு  இன்னும் 118 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை