2025க்கு பின் பாக்., இருக்காது; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

தினமலர்  தினமலர்
2025க்கு பின் பாக்., இருக்காது; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

மும்பை: ''வரும், 2025ம் ஆண்டுக்கு பின், பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்திருக்கும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறினார்.

கனவு நனவாகும்:


மும்பையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் பேசியதாவது: நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. 1947 வரை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான், பாகிஸ்தான் இருந்தது. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு எதிராக, முதல் முறையாக, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அது, நம், 'அகண்ட பாரதம்' என்ற கனவை நனவாக்க, வழி வகுத்துள்ளது. ஏனெனில், முன்பிருந்த அரசுகளுக்கு இல்லாத அரசியல் உறுதி, இப்போதுள்ள அரசுக்கு உள்ளது.

கடும் நடவடிக்கை:


தேசத்துக்கு விரோதமாக பேசுவோர், செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும். அதன்பின், ஹமீத் அன்சாரி, நவ்ஜோத் சிங் சித்து போன்றவர்கள், தேசத்துக்கு விரோதமாக, ஒரு போதும் பேச மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை