கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்! துப்பாக்கிக்காரருக்குத் தொடர்புடைய வீடுகளில் சோதனை

PARIS TAMIL  PARIS TAMIL
கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்! துப்பாக்கிக்காரருக்குத் தொடர்புடைய வீடுகளில் சோதனை

நியூஸிலந்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிக்காரர் பிரெண்டன் டெரண்ட்டுக்கு (Brenton Tarrant) தொடர்புடைய 2 வீடுகளில் ஆஸ்திரேலியக் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
 
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சேண்டி பீச் (Sandy Beach), லாரன்ஸ் (Lawrence) ஆகிய நகரங்களில் அவ்வாறு சோதனை நடத்தப்பட்டது.
 
நியூஸிலந்து அதிகாரிகளின் விசாரணைக்கு உதவத் துப்புத் துலக்கும் நோக்கில், அந்த நடவடிக்கை இடம்பெற்றதாக ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்தது.
 
சந்தேக நபரின் குடும்பத்தார் விசாரணையில் உதவி வருவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர். 

மூலக்கதை