'கோமா!' ரூ.113 கோடி மாதவரம் குடிநீர் திட்டப் பணிகள்...தேர்தலில், 'பதில் சொல்ல' காத்திருக்கும் மக்கள்...திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களுக்கு நெருக்கடி

தினமலர்  தினமலர்
கோமா! ரூ.113 கோடி மாதவரம் குடிநீர் திட்டப் பணிகள்...தேர்தலில், பதில் சொல்ல காத்திருக்கும் மக்கள்...திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களுக்கு நெருக்கடி

மாதவரம்:குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம், 113 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி, ஓராண்டாக, 'கோமா' நிலையில் உள்ளதால், குடிநீர் திட்டப்பணிகள், செயல்பாட்டிற்கு வருமா என, கேள்வி எழுந்துள்ளது.சென்னை, மாதவரம் மண்டலம், 40.55 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு, 12 வார்டுகளும், ஒவ்வொரு வார்டிலும், 60 - 100 தெருக்களும் உள்ளன.2 லட்சம் பேர்அவற்றில், குடிசை வீடு முதல் அடுக்கு மாடிகள் வரை, 51 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அதில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.இது தவிர, மண்டலம், தாலுகா அலுவலகம், ஆவின் பால்பண்ணை, கால்நடை அறிவியல் பல்கலை கழகம் உள்ளிட்ட அரசு அலுவலக பணிகளுக்காக, மற்ற பகுதிகளில் இருந்து, தினமும், 20 ஆயிரம் பேர் வரை, இங்கு வந்து செல்கின்றனர்.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் மூலம், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு, ஆண்டிற்கு, 15 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், மாதவரத்தின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் திட்டத்தை தயாரித்த, சென்னை குடிநீர் வாரியம், 2014ம் ஆண்டு பணி துவங்கியது.புழல் லட்சுமிபுரம், மாதவரம் புக்ராஜ் நகர், புழல் எம்.ஜி.ஆர்., நகர், மற்றும் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் உள்ளிட்ட, ஐந்து இடங்களில், 113 கோடி ரூபாய் மதிப்பில், 4 - 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி துவங்கி, ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது.215 நடைகள்ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பணியும், 24 மாதத்தில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை, 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.இந்நிலையில், மாதவரத்தில் வசிக்கும், 2 லட்சம் பேருக்கு, சென்னை குடிநீர் வாரியம், தினமும், 16 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கிறது.இதில், 6,000 - 9,000 லிட்டர் வரையிலான, 24 டேங்கர் லாரிகள் மூலம், 215 நடையில், குடிநீர் வழங்கப்படுகிறது.ஆனால், குடிநீர் இணைப்பு பெற்று, வரி செலுத்தும் பலருக்கும், குடிநீர் கிடைக்கவில்லை என, புகார் தொடர்கிறது. அவர்கள், தெருக்களில் வைக்கப்பட்டுள்ள, பிளாஸ்டிக் தொட்டிகளில் தான், குடிநீர் பிடித்துச் செல்லும் நிலை நீடிக்கிறது.குடிநீர் தட்டுப்பாடுமாதவரம் ரெட்டேரியின் நீர் இருப்பால், அதன் நிலத்தடி நீர் மட்டம், அருகில் உள்ள பகுதிகளுக்கு உதவுகிறது. கடந்தாண்டு மழையற்ற நிலை, தற்போது நீடிக்கும் வெயில் காரணமாக, அடுத்த மாதம், குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என, மக்கள் அச்சத்தில் சிக்கி உள்ளனர்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணியை, ஆந்திர நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், நிதி இல்லை என்ற காரணத்தால், அதற்கான ஒப்பந்தம், கடந்தாண்டு ரத்தானது. ஒப்பந்தத்தை ரத்து செய்ய விடாமல், பணியை தொடர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்தாண்டு ஜனவரியில், மறு ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், யாரும் பணியை எடுக்க முன் வரவில்லை.குடிநீர் வாரிய அதிகாரிமாதவரத்தில், குடிநீர் திட்டப்பணிகள், முழுமை அடையவில்லை. ஆனால், குடிநீர் வாரிய அதிகாரிகள், அதற்கான வரி வசூல் செய்கின்றனர். அத்தியாவசிய, அடிப்படை வசதிகள், எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. அதிகாரிகளோ, அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நழுவுகின்றனர். அதிகாரி களின் அலட்சியத்தால், எங்கள் அதிருப்தி, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்பது நிச்சயம்.பொதுமக்கள், மாதவரம்

மூலக்கதை