நியூசிலாந்து தாக்குதல்: Facebook Live நீக்கப்படுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
நியூசிலாந்து தாக்குதல்: Facebook Live நீக்கப்படுமா?

கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதல்களைத் துப்பாக்கிக்காரர் Facebook Live வாயிலாக ஒளிபரப்பியது தடுக்கப்பட்டிருக்க முடியுமா என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.

 
நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் அது தொடர்பாக
Facebook நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க்கிடம் பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
Facebookக்கில் தாக்குதல் குறித்த காணொளி 1.5 மில்லியன் முறை பகிரப்பட்டதாகவும் பின்னர் அது நீக்கப்பட்டுவிட்டதாகவும் Facebook தெரிவித்துள்ளது.
 
அண்மைச் சம்பவத்தை தொடர்ந்து இனி Facebook Live நீக்கப்படுமா? என்ற வினாவும் எழுந்துள்ளது.
 
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி காணொளிகள் நீக்கப்பட்டுவருதாகவும், அவற்றைப் பகிரவேண்டாம் என்றும் அதிகாரிகள் இணையவாசிகளைக் கேட்டுக்கொண்டனர்.
 
அந்தத் துயரச் சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை, தற்போது 50க்கு அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை