நியூசிலாந்து தாக்குதல்! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
நியூசிலாந்து தாக்குதல்! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மாண்டோர் எண்ணிக்கை, 50-க்கு அதிகரித்துள்ளது.
 
அந்தத் தாக்குதலில், மேலும் 50 பேர் காயமுற்றதாக, நியூசிலந்துக் காவல்துறை ஆணையர், மைக் புஷ் (Mike Bush) தெரிவித்தார்.
 
அந்த சம்பவத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான, 28 வயது ஆஸ்திரேலிய ஆடவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது பெயர் பிரெண்டன் ஹெரிசன் டெரண்ட் (Brenton Harrison Tarrant) என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
 
நியூசிலந்து மக்கள், அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கு உதவத் தயாராய் இருப்பதை, பிரதமர் ஜசிந்தா ஆர்டன் (Jacinta Ardern) தெளிவுபடுத்தினார்.
 
மேலும், இடதுசாரி தீவிரவாத சிந்தனைகள் கொண்டிருப்போரை விசாரிப்பதற்கும் அவர் உறுதியளித்தார்.   
 

மூலக்கதை