நாட்டின் ஏற்றுமதி உயர்வு வர்த்தக பற்றாக்குறை சரிவு

தினமலர்  தினமலர்
நாட்டின் ஏற்றுமதி உயர்வு வர்த்தக பற்றாக்குறை சரிவு

புதுடில்லி,:கடந்த பிப்ரவரியில், நாட்டின் ஏற்றுமதி, 2.44 சதவீதம் உயர்ந்து, 2 ஆயிரத்து, 667 கோடி டாலராக அதிகரித்துள்ளது.மருந்து, பொறியியல் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட துறைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக, ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

இதே காலத்தில், இறக்குமதி, 5.4 சதவீதம் குறைந்து, 3 ஆயிரத்து, 626 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. இதனால், ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசத்தை குறிக்கும், வர்த்தக பற்றாக்குறை, 960 கோடி டாலராக குறைந்துள்ளது.இது, 2018, பிப்ரவரியில், 1,230 கோடி டாலராக உயர்ந்து இருந்தது.


இதே காலத்தில், தங்கம் இறக்குமதி, 11 சதவீதம் குறைந்து, 289 கோடியில் இருந்து, 258 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – பிப்ரவரி வரையிலான, 11 மாதங் களில், ஏற்றுமதி, 8.85 சதவீதம் உயர்ந்து, 29 ஆயிரத்து, 847 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி, 9.75 சதவீதம் உயர்ந்து, 46 ஆயிரத்து, 400 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது.இதே காலத்தில், வர்த்தக பற்றாக்குறை, 14 ஆயிரத்து, 855 கோடி டாலரில் இருந்து, 16 ஆயிரத்து, 552 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

மூலக்கதை