நியூசிலாந்து தாக்குதல்: சந்தேக நபர் மீது கொலை குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
நியூசிலாந்து தாக்குதல்: சந்தேக நபர் மீது கொலை குற்றச்சாட்டு

நியூசிலந்தின் இரண்டு பள்ளிவாசல்களில் தாக்குதல்களை நடத்தி 49 பேரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது, அந்நாட்டு நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்த 28 வயது முன்னாள் உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர் பிரெண்டன் ஹெரிசன் டெரண்ட் (Brenton Harrison Tarrant) பிணை கோரவில்லை.
 
தற்போது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
அடுத்த மாதம் 5ஆம் தேதி நீதிமன்ற விசாணை மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அந்த ஆடவர் நடத்திய தாக்குதலில் காயமுற்ற சுமார் 40 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
அதில் 4 வயது குழந்தையும் அடங்கும். 

மூலக்கதை