நியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி

தினமலர்  தினமலர்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 49 பேர் உயிர் இழந்தனர். தொடர்ந்து, மருத்துவமனை அருகிலும் துப்பாக்கிசசூடு நடந்தது. கார் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

வங்கதேச வீரர்கள் மீட்பு


இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்கு சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பத்திரமாக ஓட்டலில் உள்ளதாகவும், ஆனால், அதிர்ச்சியில் உள்ளனர் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளனர்.

மோசமான நாள்


இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இந்த நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம். துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை