உலகை உலுக்கிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணி இதுவா? அதிர்ச்சி தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
உலகை உலுக்கிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணி இதுவா? அதிர்ச்சி தகவல்

தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டு இருந்த 'வரலாற்று பகை'யை வெளிப்படுத்தும் வார்த்தைகள் என தெரியவந்துள்ளது.

 
நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச் நகரில் உள்ள மஸ்ஜித் உள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி 5 வயது சிறுவன், பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்ற தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள், தீவிரவாதிகளின் வரலாற்று கோபம், வக்கிரம், பகையை வெளிப்படுத்துக்கின்றது.
 
turkofagos என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு "துருக்கி கொலைக்காரர்கள்" என பொருள்ப்படுகின்றது.
 
Miloš_Obilić- 1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1 அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயராகும்.
 
John_Hunyadi - காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் || வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதி பெயராகும்.
 
Vienna1683 - உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டாகும். இவை எல்லாம் உதுமானிய கிலாஃபத் திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள்
 
இவைமட்டுமல்லாமல், 'Refugees welcome to Hell' என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது.
 
இது புத்தி நலம் இல்லாத ஒரு பைத்தியக்காரன் நடத்திய தாக்குதல் அல்ல, முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான ஃபாஸிஸ தீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என தகவல் கூறப்பட்டு வருகின்றது. எனினும் இதன் உண்மை தன்மை இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

மூலக்கதை