ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரிட்டன் தாராளம்

தினமலர்  தினமலர்
ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரிட்டன் தாராளம்

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆராய்ச்சி படிப்பு முடித்த மாணவர்களுக்கான பணி, 'விசா' வழங்குவதை தாராளமாக்குவதாக, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பி.எச்டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு முடித்த மாணவர்களுக்கு, குறிப்பிட்ட அளவு பணி விசா மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த விதிமுறை தளர்த்தப்படுவதாக, பிரிட்டன் அரசு அறிவித்தது. இதன் வாயிலாக, இந்தியர்கள் பெரும் அளவில் பயன் அடைவர் என கூறப்படுகிறது.

மூலக்கதை