நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

தினமலர்  தினமலர்
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் உள்ள மசூதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் உயிர் இழந்தனர். துப்பாக்கிச்சூட்டின் போது மசூதியில் இருந்த வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் பத்திரமாக தப்பி சென்றனர்.

வங்கதேச வீரர்கள் மீட்பு


இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்கு சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பத்திரமாக ஓட்டலில் உள்ளதாகவும், ஆனால், அதிர்ச்சியில் உள்ளனர் என வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளனர்.

மூலக்கதை