சையத் முஷ்டாக் அலி கோப்பை முதல் முறையாக கர்நாடகா சாம்பியன்

தினகரன்  தினகரன்
சையத் முஷ்டாக் அலி கோப்பை முதல் முறையாக கர்நாடகா சாம்பியன்

இந்தூர்: சையத முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில்  மகாராஷ்டிரா அணியை 8 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவில் முதல்தர டி20 கிரிக்கெட் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி 20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தூரில் நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மகாராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். கெய்க்வாட்  12 ரன்னிலும், அவருக்கு அடுத்த வந்த விஜய் சோல் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் திரிபாதி, நவஷாத் ஷேக், அங்கித் பாவ்னே ஆகியோர் பொறுப்பாக விளையாடினர்.  அதனால் மகாராஷ்டிரா 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திரிபாதி 30, அங்கித் 29, விஜய் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தனர். கர்நாடக தரப்பில்   அபிமன்யு மிதுன் 2 விக்கெட்களையும், கரியப்பா, சுச்சித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  கர்நாடகா  களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சரத் 2 ரன்களில் வெளியறேினார். ஆனால் ரோஜ்ஹன் கடம், மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடினர். அடிக்க வேண்டிய பந்துகளைஅடித்தும், தடுக்க வேண்டிய விளையாடியதால் அணியின் ஸ்கோர் அதிகரித்தது. சிறப்பாக விளையாடிய ரோஹ்ஜன் கடம் 39 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேநேரத்தில்  மயங்க் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அதனால் கர்நாடகா அணி  18.3 ஓவரில்  2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து  8 விக்கெட் வித்தியாசத்தில வெற்றிப் பெற்றது. மயங்க் அகர்வால் 57 பந்துகளில் 87 ரன்களுடனும், கருண் நாயர் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மகாராஷ்டிரா தரப்பில் சமத் பால்லா,   தியாங்க் ஹிம்கனேகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.கர்நாடகா முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்று சாம்பியனாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட கர்நாடகா தோற்கவில்லை. கடந்த தொடரையும் சேர்த்து இதுவரை 14 வெற்றிகளை தொடர்ந்த பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற உள்ளூர் அணி என்ற சாதனைையை  கொல்கத்தா நைட் ரைடர் அணியுடன் சமன் செய்துள்ளது.

மூலக்கதை