ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததால் உலக கோப்பையை எதிர்க்கொள்ள பயமில்லை: ‘கெத்’ விராத் கோஹ்லி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததால் உலக கோப்பையை எதிர்க்கொள்ள பயமில்லை: ‘கெத்’ விராத் கோஹ்லி

மொஹாலி:  ‘ஆஸ்திரேலியாவுடனான தொடரை  இழந்ததால், இந்திய வீரர்களுக்கு உலக கோப்பைையை எதிர்க்கொள்ள பயமில்லை‘ என்று கேப்டன் விராத் கோஹ்லி தெம்பாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டி20, ஒரு நாள் போட்டித் தொடர்களை இந்தியா இழந்துள்ளது. உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் தோற்றிருப்பது லேசான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  இது குறித்து இந்திய அணியன் கேப்டன் விராத் கோஹ்லி கூறியதாவது:   கடைசி 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய  கட்டாயம் ஆஸ்திரேலியாவுக்கு  இருந்தது. அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தோல்வியால் இந்திய வீரர்கள் யாருக்கும் உலக கோப்பையை எதிர்கொள்வதில் எந்த பயமில்லை. போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு வீரர்கள் மட்டுமல்ல, அணியில் உள்ள நிர்வாகிகளும் தெம்பாகவே இருந்தோம்.   உலககோப்பையில் ஆடும் 11 பேர் யார் என்பது குறித்த தெளிவை இப்போது பெற்றுள்ளோம். ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பினால், அதற்கு ஏற்ப அணியில் மாற்றம் இருக்கும்.   உலக  கோப்பையை வெல்லும் அணி என்று எந்த அணியையும் கணிக்க முடியாது. மேற்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து உட்பட பல அணிகள் இப்போது வலுவான அணிகளாக இருக்கின்றன. நாங்களும் வலிமையான அணியாக உள்ளோம். எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அடுத்து நாங்கள் விளையாட வேண்டிய ஒருநாள் போட்டி உலக கோப்பையில்தான் தொடங்கும். அதனால் அதனை உற்சாகமாக எதிர்க்கொள்ள காத்திருக்கிறோம்.

மூலக்கதை