மார்ச் 17ம் தேதி ஐஎஸ்எல் கால்பந்து பைனலில் பெங்களூரு - கோவா மோதல்

தினகரன்  தினகரன்
மார்ச் 17ம் தேதி ஐஎஸ்எல் கால்பந்து பைனலில் பெங்களூரு  கோவா மோதல்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு பெங்களூர்- கோவா அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. இந்த அணிகள் மோதும் இறுதிப்ேபாட்டி மார்ச் 17ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 5வது சீசனின் லீக் மற்றும் அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் முடிந்துள்ளது. அரையிறுதிப் போட்டி தொடரில்  பெங்களூர் - வட கிழக்கு அணிகள் தலா ஒரு வெற்றிப் பெற்றன.  அதேபோல் கோவா - மும்பை அணிகள் மோதிய போட்டிகளும் தலா ஒரு வெற்றியின் முடிந்தன. ஆனாலும் கோல்கள் அடிப்படையில் பெங்களூர், கோவா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. இந்த 2 அணிகளும் மோதும் இறுதிப் போட்டி மும்பையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இரண்டு அணிகளும் ஏறக்குறைய சமபலத்துடன் இருப்பதால் இறுதிப் போட்டி பரபரப்பாக இருக்கும்.  லீக் சுற்றில் நடந்த 18 ஆட்டங்களில் இந்த 2 அணிகளும் தலா  10 வெற்றி, 4 சமன், 3 தோல்விகளுடன் தலா 34 புள்ளிகள் பெற்றிருந்தன. கோவா அணி கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் 2ம் இடம் பிடித்தது. ஆனால்  கோவா அணிதான் ஒவ்வொரு தொடரிலும் அதிக கோல்கள் அடிக்கும் அணியாக உள்ளது.இந்த சீசனின் லீக் சுற்றில் கோவா 36 கோல்களும், பெங்களூர் 29 கோல்களும் அடித்துள்ளன. அரையிறுதித் சுற்றில் கோவா 5 கோல்களும்,  பெங்களூர் 4 கோல்களும் அடித்துள்ளன. பெங்களூர் அணியில் இந்திய அணியின்  கேப்டன் சுனில் சேத்ரி  இந்த சீசனில் 9 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார். வெனிசுலாவின் மிக்கு 5 கோல்கள் அடித்து 7வது இடத்தில் இருக்கிறார்கோவா அணியில் ஸ்பெயின் நாட்டின் ஃபெரன் காட்டும் வேகம் அணிக்கு அதிக கோல்களை பெற்றுத் தருகிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் அவர் 16 கோல்கள் அடித்து  முதல் இடத்தில் இருக்கிறார். 4வது இடம் பிடித்துள்ள 7 கோல்கள் அடித்த ஸ்பெயினின் எடு பெடியா கோவா அணியயை சேர்ந்தவர். இரண்டு அணிகளிலும் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். கோவா அணி 2வது முறையாக இறுதிப் ேபாட்டிக்கு  தகுதிப் பெற்றுள்ளது. லீக் ேபாட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தினாலும் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் கோட்டை விட்டுவிடும் அணியாக கோவா உள்ளது.பெங்களூர் அணி கடந்த ஆண்டுதான் ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமானது.  தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த அணி கடந்த முறையும் லீக் ேபாட்டியில் முதலிடம் பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் சென்னையிடம் தோற்றது. இந்த முறை இரண்டு அணிகளும் முதல்முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்புடன் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. போட்டி முடிவில் கொல்கத்தா, சென்னையை தொடர்ந்து ஐஎஸ்எல் கோப்பையை வெல்லும் 3வது அணி யார் என்று தெரிய வரும்.கோவா பயிற்சியாளர்  செர்ஜியோ லோபிரா: இந்த தொடரின் மிகச்சிறந்த அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டியின் மூலம் நமது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில் வெற்றிக் கோப்பையை கொண்டு வருவோம். பெங்களூர் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்: இந்த இரண்டு அணிகளும் சிறந்த அணிகள். கால்பந்து போட்டிகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் நிகழும். அதனை உணர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளோம்.

மூலக்கதை