ரூ.250 கோடி வசூல்!

தினமலர்  தினமலர்
ரூ.250 கோடி வசூல்!

'யாமி கவுதமை, கோபப்படுத்தி அழவிடுவதே, பத்திரிகைகளுக்கு வேலையாகி விட்டது' என, அவரது நட்பு வட்டாரங்கள் கடுப்புடன் பேசுகின்றன.


சமீபத்தில் ஒரு நிருபர் அவரிடம், 'நீங்கள், என்னதான் சிறந்த நடிகை எனக் கூறிக்கொண்டாலும், உங்களுக்கு போதிய படங்கள் கைவசம் இல்லையே... ஏன்?' என, கேட்டார்.உடனே, யாமியின் முகம், சுருங்கி விட்டது. அவர் கூறுகையில், ''சமீபத்தில் நான் நடித்த, யூரி என்ற ஹிந்தி படம்,
50 நாட்களை கடந்து ஓடுகிறது. இதுவரை, 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.


இந்த ஒரு பெருமை, எனக்கு போதுமே... அதிகமான படங்களில் நடித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை,'' என, கடுப்பாகி உள்ளார்.

மூலக்கதை