மாமியார் மெச்சும் மருமகள்!

தினமலர்  தினமலர்
மாமியார் மெச்சும் மருமகள்!

'பிரியங்கா சோப்ரா, ஒரு சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், பொறுப்பான குடும்ப தலைவியாகவும் மாறி விட்டார்' என, பாலிவுட்டில் பெருமையுடன் பேசுகின்றனர். பிரியங்காவின்
கணவரும், அமெரிக்க பாடகருமான, நிக் ஜோனசுக்கு, மூன்று சகோதரர்கள் உள்ளனர்.


இவர்களது வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், பொறுப்புடன் பங்கேற்கிறார், பிரியங்கா. மாமியார் மெச்சும் மருமகளாகவும் மாறியுள்ளார். புகுந்த வீட்டுக்குச் சென்றாலும், பிறந்த வீட்டையும், அவர் மறக்கவில்லை. சமீபத்தில், மும்பைக்கு வந்த அவருக்கு, தன் உறவினர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தகவல், தெரிந்தது. உடனே, உறவினரை நேரில் சென்று பார்த்து விட்டுத் தான், அமெரிக்காவுக்கு சென்றாராம்.

மூலக்கதை