'யங் மங் சங்'

தினமலர்  தினமலர்
யங் மங் சங்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தபோதே, திடீரென பாலிவுட்டுக்கு தாவி, அங்கு வெற்றிப் படங்களின் இயக்குனராக அவதாரம் எடுத்தார், பிரபுதேவா. ஆனால், தொடர்ந்து மசாலா படங்களாக இயக்கியதால், அங்கு அவரால், நிலைக்க முடியவில்லை. சமீபகாலமாக, மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார், பிரபு தேவா. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான, சார்லி சாப்ளின் - 2 பெரிய வரவேற்பை பெறவில்லை.


இதனால், அடுத்து வெளியாகவுள்ள, யங் மங் சங் படத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில், நீண்ட இடைவேளைக்கு பின், லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மூலக்கதை