கர்தார்பூர் வழித்தட பணி இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடக்கம்

தினகரன்  தினகரன்
கர்தார்பூர் வழித்தட பணி இந்தியாபாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடக்கம்

அட்டாரி: சீக்கியர்கள் மத வழிபாட்டிற்காக இரு நாட்டு எல்லையை இணைத்து அமைக்கப்பட உள்ள கர்தார்பூர் வழித்தடம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் சமாதி, பாகிஸ்தானின் குருத்வாரா தர்பார் சாகிப்பில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், குருநானக் ஜெயந்தியையொட்டி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீக்கியர்கள்  எல்லை தாண்டி சென்று வழிபடுவது வழக்கம். குருநானக்கின் 550ம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, கடந்த ஆண்டு நவம்பரில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தேரா பாபா நானக் கோயிலில் இருந்து குருத்வாரா தர்பார் சாகிப்பை இணைக்கும் வகையில கர்தார்பூர் சிறப்பு வழித்தடம்  அமைக்க இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் முடிவு செய்தன. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதனால், பாலகோட்டில் தீவிரவாத முகாம்களை இந்தியா  குண்டுவீசி தகர்த்தது. இந்த சம்பவத்தால் இரு நாடுகள் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதற்கான நடைமுறைகளை இறுதி செய்வதற்கான இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை  அட்டாரி-வாகா எல்லையில் நேற்று தொடங்கி இருக்கிறது. கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் நடக்கும் முதல்கட்ட கூட்டம் இது. இப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சீக்கியர்கள் விசா இன்றி எல்லை தாண்டி சென்று சீக்கிய  குருவை வழிபட்டு வர முடியும்.

மூலக்கதை