திறந்த நிலை இணையதள சேவைக்கு வரவேற்பு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
திறந்த நிலை இணையதள சேவைக்கு வரவேற்பு அதிகரிப்பு

அரசு சேவை­களை வீட்­டி­லி­ருந்தே பெறும், திறந்த நிலை இணை­ய­தள சேவை திட்­டத்­தில், விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது என, டி.என்.இ.ஜி.ஏ., அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.


மத்­திய – மாநில அர­சு­க­ளின் சேவை­களை பெற, டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்­நாடு மின்­னா­ளுமை முகமை இயக்­க­கம், தமிழ்­நாடு அரசு கேபிள், ‘டிவி’ வழி­யாக, அரசு, ‘இ – சேவை’ மையத்தை செயல்­ப­டுத்தி வரு­கிறது.


பரி­வர்த்­த­னை­கள்



இந்­நி­லை­யில், இ – சேவை மையங்­களில் பொது­மக்­கள் நீண்ட நேரம் காத்­தி­ருப்­பதை தவிர்க்க, ‘திறந்த நிலை சேவை தளம்’ திட்­டம், கடந்த ஆண்டு ஜூலை­யில் துவங்­கப்­பட்­டது. இதன் வாயி­லாக தினந்­தோ­றும் பல ஆயி­ரம் பேர் பயன் அடைந்து வரு­கின்­ற­னர்.


டி.என்.இ.ஜி.ஏ., அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:


அரசு, இ – சேவை­யின் திறந்த நிலை சேவை தளம் திட்­டம் கடந்த ஆண்டு துவங்­கப்­பட்­டது.
முதல் துறை­யாக, வரு­வாய் இணைக்­கப்­பட்டு, வரு­மான சான்­றி­தழ், இருப்­பிட சான்­றி­தழ் என, 20 சேவை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.இந்த திட்­டம் துவங்­கிய போது, குறைந்த அளவு மக்­களே இதில் விண்­ணப்­பித்­த­னர். தற்­போது மிகுந்த வர­வேற்பு பெற்று வரு­கிறது. நாள் ஒன்­றுக்கு, 30 ஆயி­ரம் இணை­ய­தள பரி­வர்த்­த­னை­கள் தற்­போது நடை­பெ­று­கின்­றன.


லைசென்ஸ் புதுப்­பிப்பு



இதில், நாள் ஒன்­றுக்கு, 3,000 பேர் திறந்த நிலை சேவை தளம் வழி­யாக விண்­ணப்­பிக்­கின்­ற­னர்.
மக்­க­ளி­டத்­தில் இதற்கு வர­வேற்பு கூடி வரு­கிறது.இதில் கூடு­த­லாக, போலீஸ் சரி­பார்ப்பு சான்­றி­தழ், போக்­கு­வ­ரத்து துறை­யின் லைசென்ஸ் புதுப்­பிப்பு, முக­வரி மாற்­றம் போன்ற பல சேவை­களும் விரை­வில் இணைக்­கப்­பட உள்­ளன.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

– நமது நிரு­பர் –

மூலக்கதை