முட்டை விலை 370 காசுகளாக நிர்ணயம்

தினமலர்  தினமலர்
முட்டை விலை 370 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 370 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.


இதில், 385 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 15 காசுகள் குறைத்து, 370 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை, காசுகளில் நிலவரம்:சென்னை, 375; ஐதராபாத், 335; விஜயவாடா, 360; பர்வாலா, 343; மும்பை, 395; மைசூரு, 370; பெங்களூரு, 375; கோல்கட்டா, 408; டில்லி, 370.முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.


பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கிலோ, 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை, 2 ரூபாய் உயர்த்தி, 73 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.

மூலக்கதை