எழுமின் இரண்டாம் உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
எழுமின் இரண்டாம் உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு.

எழுமின் இரண்டாம் உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு.

மே 03-05, சைபர் ஜெயா பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா.

 

'எழுமின்'- The Rise என அறியப்பட்ட முதல் உலகத் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு கடந்த 2018 டிசம்பர் 28, 29, 30 நாட்களில் மதுரை மாநகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. 17 நாடுகளிலிருந்து 500 தமிழ்த் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். தமிழ் நட்பின் தடங்கள் பற்றி, ஒத்துழைப்பின் பண்பாட்டை தகவமைக்க முயன்ற நம்பிக்கையின் புதியதொரு வாயில் திறப்பாக மாமதுரை மாநாடு அமைந்தது. முதல் மாநாடு நிறைவுற்ற நான்கு மாதங்களில் இதோ இரண்டாம் உலகத் தமிழ் தொழில் முனைவோர்- திறனாளர்கள் மாநாடு வரளர்கிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நாட்டுக்கோட்டைத் நற்றமிழர் Tan Sri டத்தோ திரு. பலன் அவர்கள் உருவாக்கிய சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் - மே 3, 4, 5 நாட்களில்.

குடியுரிமையின்றித் தவித்த பல்லாயிரம் தமிழருக்காய் வாதாடி வென்ற எமது தோழமை அமைப்பான DHRRA Malaysia மற்றும் மலேசிய CTACIS அமைப்புகள் இம் மாநாட்டினை திரு. சரவணன் சின்னப்பன் அவர்கள் தலைமையில் கட்டமைக்கின்றன.

21-ம் நூற்றாண்டு, ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளுக்குரியது சீனா- இந்தியா- ஜப்பான்-சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இதில் முக்கிய வகிபாகம் உண்டு. ஆனால் வியப்பூட்டும் தொழில் வணிக வாய்ப்புகள் மலரப்போவது இப்பிராந்தியத்தின் வியட்நாம், மயன்மார் என்ற பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில். இப்பிராந்தியத்துடன் தமிழரின் வணிகத் தொடர்புகள் ஈராயிரம் ஆண்டு கால வேரோட்டம் கொண்டவை. ஆதலால் ஜப்பான், சீனா, சிங்கப்பூர், வியட்நாம், மியான்மர், கம்போடியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிழக்கு, தென்கிழக்கு, தூரக் கிழக்கு மற்றும் பசிபிக் நாடுகளுக்கான நுழைவாயிலாகவும், உயர்மேட்டுக் களமாகவும் மலேசியாவைக் கருதுகிறோம். எனவே மே 3, 4, 5 நாட்களில் நடைபெறவுள்ள இரண்டாம் உலகத்தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு புவிசார் நோக்கில் மூலோபாய முக்கியத்துவம்( Geo Strategic importantance) கொண்டது. அந்நாடுகளில் தொழில் -வணிகம் செய்யும் தமிழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருப்பது தனிச்சிறப்பு.

The Rise- எழுமின் இயக்கம் எதற்காக?
1.தொழில்-வணிகத்தில், அறிவுத்துறைகளில், மூலதனச் சந்தையில் தமிழர்கள் வென்று உலகப்பரப்பில் மதிப்பிற்குரிய மக்களாய் எழவேண்டும்.

2. அடுத்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் பத்து லட்சம் சிறு-குறு- பெரிய தொழில்முனைவோரை வளர்த்தெடுக்கவேண்டும். அதன்மூலம் தமிழகத்தை 1ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வலுச்செய்யவேண்டும்.

3. முற்றிலும் சிதைந்துவிட்ட ஈழத்தமிழ் மக்களின் பொருண்மியத்தை மீள்கட்டமைக்கத் துணைநிற்கவேண்டும்.

இன்னும் இவ்வாறு, சில.

மாநாடுகளால் என்ன பயன்?

1. நாம் தனிப்பட்டும், தமிழச் சமூகமாகவும் வளர்வதற்கான வழித்தடம் புலப்படும்.

2. நம்பிக்கையான தொழில் நட்புறவுகள் வலுவாக உருவாகும்.

3. புதிய தொழில் யோசனைகள் கிட்டும்.
இன்னும் பல..

எனவே வாருங்கள். தொழில்வாய்ப்புகள் சிலருக்கு/ கணிசமானவர்களுக்கு/ பலருக்கு கிடைக்கும், கிடைக்கலாம். ஆனால் பயன்மிகு தொடர்புகள் நிச்சயம் மிகப் பலருக்கு கிடைக்கும்; உறுதியாக தமிழ் நட்பு எல்லோருக்கும் வசமாகும். The Rise என்ற எழுமின் 21ம் நூற்றாண்டில் தமிழரின் தலைநிமிர் காலத்திற்கான அதிகாலை வெளிச்சம், அறத் துணிவு, அன்பின் முழக்கம்!

பதிவுக் கட்டணம்: உடனடியான சலுகைப்பதிவு, $259.( மூன்று நாட்கள் மாநாட்டு அனுமதி, காலை, மதிய, இரவு உணவு-சிற்றுண்டிகள், விமானநிலைய வரவேற்பும் வழியனுப்புதலும்).

இருவர் இரு படுக்கைகள் கொண்ட ஒரு அறை பகிர்வதாயிருந்தால் மாநாட்டு வளாகம் அருகிலேயே விடுதிகள் நாளொன்றுக்கு நபருக்கு சுமார் ரூ. 1500 அளவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது..

பதிவு செய்ய: www.therise.asia

தொலைபேசி: +60122375254
மின்னஞ்சல். : [email protected]

தமிழ்ப்பணி Fr. ம. ஜெகத் கஸ்பார்.
நிறுவனர், எழுமின்-The Rise.
#therise.
#therisemsia

மூலக்கதை