பினராயி எதிர்ப்பது மோடியையா, அதானியையா?

தினமலர்  தினமலர்
பினராயி எதிர்ப்பது மோடியையா, அதானியையா?

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு, தொழில் துறைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், சமீப காலமாக, அங்கு, பல்வேறு தொழில் நிறுவனங்கள்,முதலீடுகளை குவிக்கத் துவங்கி உள்ளன.காங்., தலைமையிலான முந்தைய, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு துவக்கிய பல திட்டங்களை நிறுத்தாமல், அவற்றை துரிதப்படுத்தி செயல்படுத்துவதால், கேரள அரசு மீது, தொழில் துறையினருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையம் உட்பட, நான்கு சர்வதேச விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, 'அதானி' குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை