இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்சினைக்குரியது: கடற்படை தளபதி

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்சினைக்குரியது: கடற்படை தளபதி

4  நாட்கள் அரசு முறைப் பயணமாக  பிரிட்டன் சென்றுள்ள கடற்படை தளபதி சுனில் லாம்பா, லண்டனில் நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். அங்கு அவர் பேசியதாவது:-
 
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கப்பல்கள் கட்டுவதில் சீனா அதிக அளவு செலவிட்டு வருகிறது. சீனாவை போல மற்ற எந்த நாடுகளும் கப்பல் கட்டுவதற்காக செலவிடுவதில்லை. இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் எந்நேரமும் சீனாவின் 6-8 கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் காணப்படுகின்றன. இது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான். எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்றார்.

மூலக்கதை