ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் யாருமே கண்டுக்கல: போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு

தினமலர்  தினமலர்
ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் யாருமே கண்டுக்கல: போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு

சிவகாசி;விருதுநகர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் ரோட்டின் ஓரத்திலே டூ வீலர்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பலரும் பாதிக்கின்றனர்.மாவட்டத்தில் அலுவலகம், கடைகள் என பல்வேறு நிறுவனங்கள் போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டின் அருகில்தான் உள்ளது.
டூ வீலர், கார்களில்தான் வருபவர்கள் போக்குவரத்து நிறைந்த ரோட்டிலும், ரோட்டின் அருகிலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் ரோட்டில் செல்கிற மற்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன.
நடந்து, சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதேபோல்தான் கிராமப் பகுதிகளிலும் தங்களது வாகனங்களை ரோட்டில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
சிவகாசி நகரில் உள்பகுதியில் அனைத்து ரோடுகளுமே மிகவும் குறுகலாக உள்ளன. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள சேர்மன் சண்முக நாடார் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு, , பஸ் ஸ்டாண்டு மற்றும் அருகே, ஸ்ரீவி., ரோடு என பல இடங்களில் டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன.
நிறுவனமோ, கடையோ என எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி ஏற்படுத்த வேண்டும். இதை நகராட்சி நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கையும் அவசியமாகிறது.
விபத்துக்கு வழி
எந்த ஒரு நிறுவனமும் வாகனம் நிறுத்துவதற்கு தங்களது சொந்த இடத்தில் இடம் ஏற்படுத்தி தருவதில்லை. இதனால் ரோட்டினை பார்க்கிங் இடமாக மாற்றி விடுகின்றனர். இதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு விபத்து ஏற்பட வழி தருகிறது.சம்பத்குமார், சமூக ஆர்வலர், சிவகாசி.

மூலக்கதை