நான்கு மாநிலங்களில்தேர்தல் குழு ஆய்வு

தினமலர்  தினமலர்
நான்கு மாநிலங்களில்தேர்தல் குழு ஆய்வு

புதுடில்லி, : மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில், லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, துணை தேர்தல் ஆணையர், சுதீப் ஜெயின் தலைமையிலான குழு ஆய்வு நடத்தவுள்ளது.நாடு முழுவதும், ஏப்., 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கஉள்ளது. மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாகவும், வட கிழக்கு மாநிலங்களான, திரிபுரா மற்றும் மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும், அசாமில் மூன்று கட்டங்களாகவும், தேர்தல் நடக்கவுள்ளது.நேற்று முன்தினம், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்த, பா.ஜ., வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர், மேற்கு வங்கத்தை பதற்றமான மாநிலமாக அறிவிக்கக் கோரினர்.

மூலக்கதை