பிரெக்சிட்' ஒப்பந்தம்' தாமதப்படுத்த முடிவு

தினமலர்  தினமலர்
பிரெக்சிட் ஒப்பந்தம் தாமதப்படுத்த முடிவு

லண்டன்:ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் நாடு வெளியேறுவதற்கான, 'பிரெக்சிட்' நடவடிக்கை தொடர்பாக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி, அந்நாட்டு பிரதமர் தெரசா மே, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். பிரிட்டன் பார்லிமென்டில், இந்த ஒப்பந்தம், சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேச்சு நடத்தி, பிரெக்சிட் ஒப்பந்தத்தில், சில மாறுதல்களை, பிரதமர் தெரசா மே தாக்கல் செய்தார். இந்த ஒப்பந்தம், பிரிட்டன் பார்லி.,யில் நேற்று முன்தினம் தோற்கடிக்கப்பட்டது.

மூலக்கதை