பனிச்சரிவில் சிக்கி 22 நாட்களுக்கு பின் 2 வீரர்களின் சடலம் மீட்பு

தினகரன்  தினகரன்
பனிச்சரிவில் சிக்கி 22 நாட்களுக்கு பின் 2 வீரர்களின் சடலம் மீட்பு

கின்னார்:  இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 20ம் தேதி பனிச்சரிவில் சிக்கிய மாயமான 2 ராணுவ வீரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஷிப்கலா என்ற இடத்தில் கடந்த மாதம் 20ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் 6 பேர் புதைந்தனர். இவர்களில் சம்பவத்தன்று ஒரு வீரர் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், ஹவில்தார் ராகேஷ்குமார், ராஜேஷ்  ரிஷி மற்றும் கோவில் பகதூர் ஆகிய வீரர்களின் சடலங்கள் கடந்த 2, 4, மற்றும் 9ம் தேதி மீட்கப்பட்டது. பனிச்சரிவில் சிக்கி 22 நாட்கள் ஆன நிலையில் நாயக் விதேஷ் சந்த், அர்ஜூன் குமார் ஆகிய 2 வீரர்களின் சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன.  நாயக் இமாச்சலப் பிரதேசத்தின் கார்கா கிராமத்தையும், அர்ஜூன்குமார்  ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்.

மூலக்கதை