அப்போதே பதிலடி தந்திருந்தால் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்திருக்காது: நிர்மலா சீதாராமன் காட்டம்

தினகரன்  தினகரன்
அப்போதே பதிலடி தந்திருந்தால் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்திருக்காது: நிர்மலா சீதாராமன் காட்டம்

புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பதிலடி கொடுத்திருந்தால் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்திருக்காது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் பாஜ தொண்டர்களிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசியதாவது: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தீவிரவாத செயல்கள் உயிர்ப்புடன் இருந்திருக்காது. காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாஜ அரசு 10 நாட்கள் வரை காத்திருந்து உளவுத்துறை தகவல்களை சேகரித்தது.  அப்போது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத பயிற்சி முகாம் மீது விமானப்படை தாக்குதலை நடத்தினோம். இவ்வாறு  பேசினார்.

மூலக்கதை