இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தினகரன்  தினகரன்
இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை ஓபிஎஸ், இபிஸ் அணிக்கு ஒதுக்கியது  செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, டிடிவி.தினகரன் தரப்பில் கடந்த 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் போலியான உறுப்பினர்கள் கையெழுத்து அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். இதனை சரிவர ஆராயாமல் தலைமை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சாதகமான உத்தரவை வழங்கியது. இதையே டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது ஒருதலைபட்சமானது. இந்த தீர்ப்புகளை  ரத்து செய்து, வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மூலக்கதை