இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் பெடரர், நடால்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் பெடரர், நடால்

கலிபோர்னியா:  அமெரிக்காவில் நடந்து வரும் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் பிஎன்பி பாரிபாஸ் ஓபனில் முன்னணி வீரர்களான பெடரர், நடால் ஆகியோர் காலிறுதிக்கு எளிதாக முன்னேறினர். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் இளம் வீரர் கைல் எட்மண்டை 6-1, 6-4 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

64 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெடரர் கூறுகையில், ‘‘கைல் எட்மண்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதில் சற்று நிம்மதி.

ஏனெனில் அவர் வளர்ந்து வரும் வீரர். போட்டிக்கு போட்டி அவரது திறன் கூடி வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பிய இளம் வீரர் பிலிப் கிரானிஜோவிச்சை 6-3, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

.

மூலக்கதை