இரண்டு படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சமந்தா

தினமலர்  தினமலர்
இரண்டு படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சமந்தா

யுடர்ன் படத்திற்கு பிறகு தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து மஜிலி மற்றும் ஓ பேபி எந்த சக்ககுன்னவே ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஓ பேபி எந்தசக்ககுன்னவே படத்தில் அவர் இளமையான தோற்றம் மட்டுமின்றி 70 வயது பெண்ணாகவும் நடிக்கிறார்.

இதற்கிடையே, நாகசைதன்யாவுடன் நடித்து வரும் மஜிலி படத்திலும் சமந்தா, இரண்டு விதமான கெட்டப்பில் தோன்றுகிறாராம். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் இப்போதைய தோற்றம் மட்டுமின்றி, பிளாஷ்பேக் காட்சியில் மாணவி பருவத்து கெட்டப்பில் நடித்துள்ளாராம் சமந்தா. இப்படம் ஏப்ரல் 5-ந்தேதி திரைக்கு வருகிறது.

மூலக்கதை