14 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா

தினமலர்  தினமலர்
14 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா

2005ல் தெலுங்கில் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். அதன்பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்த அனுஷ்கா, சுந்தர்.சி இயக்கிய ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தமிழுக்கு வந்தார். பின்னர் அருந்ததி மூலம் தமிழ், தெலுங்கில் உச்சம் தொட்டார்.

பாகுபலி படத்திற்கு பிறகு, உடல் எடை குறைப்பிற்காக சிறு இடைவெளி கொடுத்த அனுஷ்கா, தற்போது சைலன்ஸ் மற்றும் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் கதையில் உருவாகும் படத்திலும் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், அனுஷ்கா நடிக்க வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அதையடுத்து தனது இணைய பக்கத்தில் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த பூரிஜெகன்னாத், நாகார்ஜூனா தொடங்கி தனது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை