அஜய் தேவ்கனுக்கு மனைவியாகும் கீர்த்தி சுரேஷ்

தினமலர்  தினமலர்
அஜய் தேவ்கனுக்கு மனைவியாகும் கீர்த்தி சுரேஷ்

கடந்த ஆண்டு விஜய், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் வாழ்க்கை படமான மகாநடி படத்திலும் நடித்தார். இந்த ஆண்டு அவருக்கு தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்தபடி படங்கள் புக்காகவில்லை.

தற்போது மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற மலையாள படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பவர், தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்திநிலையில், ஹிந்தியில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அமித்சர்மா இயக்கும் இந்த படத்தில் அஜய் தேவ்கனின் மனைவி வேடத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, டில்லி, லக்னோ, கோல்கட்டா, மெல்போர்ன் ஆகிய நாடுகளில் நடை பெறுகிறது.

மூலக்கதை