யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்!

யாழில் அதிகரித்துள்ள கடும் வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

 
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
 
யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார்.
 
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
 
யாழ்ப்பாணத்தில் கடும் வெப்பநிலை நிலவுகின்ற நிலையில் மக்களை மதிய நேரங்களில் வெளிவேலைகளில் ஈடுபடுவதை குறைத்துக்கொள்ளுமாறும், அதிக நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை