ஆர்ஆர்ஆர் தலைப்பு : நாயகி ஆலியா, அஜய் தேவகனும் இணைந்தார்

தினமலர்  தினமலர்
ஆர்ஆர்ஆர் தலைப்பு : நாயகி ஆலியா, அஜய் தேவகனும் இணைந்தார்

பாகுபலி 2 படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா கதாநாயகனாக நடிக்க ஆர்ஆர்ஆர் என தற்காலிகப் பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. படத்தின் நாயகியாக ஆலியா பட் நடிக்க உள்ளதாக ராஜமவுலி அறிவித்துள்ளார்.

ராம்சரண் ஜோடியாக அவர் நடிக்கிறாராம். டெய்சி என்ற வெளிநாட்டு நடிகை ஜுனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்க உள்ளாராம். மேலும், ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அறிவித்துள்ளார்கள். தமிழ் நடிகர் சமுத்திரக்கனிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உண்டு.

அல்லுரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். 1920களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து போராடினார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பையே படத்தின் நிரந்தரத் தலைப்பாகவும் அறிவித்துவிட்டார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் வேறு சில இந்திய மொழிகளிலும் படத்தை 2020ம் ஆண்டு ஜுலை 30ம் தேதி வெளியிடப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

மூலக்கதை