ஏப்., 12ல் ஜீவாவின் கீ ரிலீஸ்

தினமலர்  தினமலர்
ஏப்., 12ல் ஜீவாவின் கீ ரிலீஸ்

ஜீவா நடிப்பில் வெளியான பல படங்கள் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து நம்பிக்கையோடு நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவாவை வைத்து 'கீ' படத்தை தயாரித்தார் மைக்கேல் ராயப்பன். 'குளோபல் இன்போடெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் அவர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 'யு' சான்று கிடைத்த நிலையில் படம் வெளியாகாமல் இருந்தது. இப்படத்தை ரிலீஸ் செய்ய தேதிகளும் குறித்தார்கள். ஆனால் 'கீ' குறித்த அந்த தேதிகளில் வெளியாகவில்லை.

இந்நிலையில் 'கீ' படத்தை ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி', 'கொரில்லா' ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது!

மூலக்கதை