சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தினமலர்  தினமலர்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டகத்தி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக அவர் நடித்த காக்கா முட்டை படம்தான் அவரை பேச வைத்தது. தனுஷ் உடன் ஜோடி சேர வேண்டும் என்பது அவரது ஆசை, அந்த ஆசையும், வட சென்னை படத்தில் நிறைவேறியது.

அதன்பிறகு, சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்த, கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தார் ஐஸ்வர்யா. அந்தப்படம் வெற்றி பெற்ற பிறகு, சிவகார்த்திகேயன் உடனும் டூயட் பாட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக சொன்னார். அந்த ஆசையும் விரைவில் நிறைவேறப் போகிறது.

மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதன்பிறகு தன்னை மெரினா படத்தில் நாயகனாக அறிமுகம் செய்த பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை