குயின்டன் அரைசதம்: தென் ஆப்ரிக்கா வெற்றி | மார்ச் 13, 2019

தினமலர்  தினமலர்
குயின்டன் அரைசதம்: தென் ஆப்ரிக்கா வெற்றி | மார்ச் 13, 2019

போர்ட் எலிசபெத்: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் குயின்டன் டி காக் அரைசதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு உபுல் தரங்கா (4), ஒஷாடா பெர்ணான்டோ (0) ஏமாற்றினர். அவிஷ்கா பெர்ணான்டோ (29), குசால் மெண்டிஸ் (21), தனஞ்செயா டி சில்வா (21) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய இசுரு உதானா (78) அரைசதம் கடந்தார். இலங்கை அணி 39.2 ஓவரில் 189 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் அன்ரிச் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சுபல இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரீஜா ஹென்டிரிக்ஸ் (8) ஏமாற்றினார். மார்க்ரம் (29) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் (51) அரைசதம் கடந்தார். கேப்டன் டுபிளசி (43) நம்பிக்கை தந்தார். பொறுப்பாக ஆடிய டேவிட் மில்லர் (25*), டுமினி (31*) அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

தென் ஆப்ரிக்க அணி 32.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்க அணி 4–0 என முன்னிலை பெற்றது.

மூலக்கதை