பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள்: சரமாரியாக சுட்டதில் பல மாணவர்கள் பலி!

PARIS TAMIL  PARIS TAMIL
பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள்: சரமாரியாக சுட்டதில் பல மாணவர்கள் பலி!

பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் இரண்டுபேர் பள்ளி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி மாணவர்கள் 5 பேர் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 
 
இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
பிரேசில் நாட்டின் ஆரம்பப் பள்ளி ஒன்றில் இந்த கொடூர சம்பவம் நடந்துளது. முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளியதாகவும், அதன் பின் அவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பலியாகிவிட்டதாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
 
சுமார் 100 மாணவர்கள் படித்துவரும் இந்த பள்ளிக்கு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததை அடுத்து காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இதுபோல் அடிக்கடி துப்பாக்கி சூடு நடந்து வருவதால் அங்கு வாழும் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
 

மூலக்கதை