சையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதி போட்டியில் இன்று மகாராஷ்டிரா - கர்நாடகா மோதல்

தினகரன்  தினகரன்
சையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதி போட்டியில் இன்று மகாராஷ்டிரா  கர்நாடகா மோதல்

இந்தூர்: சையது முஷ்டாக் அலி  டிராபி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா - கர்நாடகா அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த பிப். 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றில் தமிழ்நாடு, புதுச்சேரி, ரயில்வே, பெங்கால், மும்பை, ஆந்திரா உட்பட மொத்தம் 37 அணிகள் 5 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.  இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் லீக் சுற்றின் ஏ பிரிவில் ஜார்க்கண்ட், குஜராத், ரயில்வே,  பெங்கால், மகாராஷ்டிரா அணிகளும், பி பிரிவில் டெல்லி, விதர்பா, மும்பை, கர்நாடகா, உத்ரபிரதேச அணிகளும் விளையாடின. இந்த சுற்றின் ஏ பிரிவில் மகாராஷ்டிரா அணியும், பி பிரிவில் கர்நாடகா அணியும் விளையாடிய 4 போட்டியிலும் அபாரமாக வென்று தலா 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றன.  சூப்பர் லீக் சுற்றில் மட்டுமல்ல, லீக் சுற்றிலும்  டி பிரிவில் இடம் பெற்ற கர்நாடகா அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த அணி நடப்பு சீசனில் தொடர்ந்து 11, போன சீசனில் 2 என தொடர்ச்சியாக 13 வெற்றிகளை குவித்துள்ளது. லீக் சுற்றின் ஈ பிரிவில் இடம் பெற்ற மகாராஷ்டிரா அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்றிருந்தது. நடப்பு சாம்பியனான டெல்லி அணி சூப்பர் லீக் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றில் வெளியேறிய தமிழ்நாடு அணி, இந்தப் போட்டி அறிமுகமான 2006-07ம் ஆண்டின் முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி என்பது குறிப்பிடத்கக்கது. அப்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை என்ற பெயரில் நடத்தப்படாமல  மாநிலங்களுக்கு இடையிலான டி20 போட்டி என்று நடத்தப்பட்டது. பெயர் மாற்றப்பட்ட பிறகு 2009-10ல் நடைப்பெற்ற போட்டியில் மகாராஷ்டிரா சாம்பியன் பட்டம் வென்றது. இப்போது 2வது முறையாக  இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. அதே சமயம், கர்நாடகா முதல் முறையகாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி இந்தூரில் இன்று மாலை 5.30க்கு தொடங்கு நடைபெறுகிறது. கர்நாடகா: மணிஷ் பாண்டே (கேப்டன்), கருண் நாயர் (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், மனோஜ் பண்டாகே, கே.சி.கரியப்பா, ஷ்ரேயாஸ் கோபால், ரோஜ்ஹன் கடம், வி.கவுஷிக், அபிமன்யு மிதுன், பிரசித் கிரிஷ்ணா, பி.ஆர்.ஷரத், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், லவ்னித் சிசோடியா, ஜெகதீஷா சுசித், வினய் குமார். மகாராஷ்டிரா: ராகுல் திரிபாதி (கேப்டன்), நவுஷத் ஷேக் (துணை கேப்டன்), அங்கித் பாவ்னே, சத்யஜீத் பச்சாவ், சமத் பால்லா, ருதுராஜ் கெய்க்வாட், விஷால் ஜிதே, ஸ்வப்னில் குகாலே, திவ்யாங் ஹிம்கனேகர், மனோஜ் இங்கேல், அஸிம் காஸி, ரோகித் மோத்வானி, நிகில் நாயக், ஹிதேஷ் வாலுஞ், யாஷ் நஹர், விஜய் ஸோல்.

மூலக்கதை