ரொனால்டோ ஹாட்ரிக்: கால் இறுதியில் ஜுவென்டஸ்

தினகரன்  தினகரன்
ரொனால்டோ ஹாட்ரிக்: கால் இறுதியில் ஜுவென்டஸ்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட ஜுவென்டஸ் அணி தகுதி பெற்றது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் கட்ட ஆட்டத்தில் ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்ததால், 2ம் கட்ட ஆட்டத்தில் கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய ஜுவென்டஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து (27, 49, 86வது நிமிடம்) அசத்தினார்.இதனால் 3-2 என்ற மொத்த கோல் அடிப்படையில் ஜுவென்டஸ் அணி கால் இறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரொனால்டோ அடித்த 8வது ஹாட்ரிக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

மூலக்கதை