உக்ரைனோடு போர் மூளும் வாய்ப்பில்லை: ரஷ்ய அதிபர் அறிவிப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உக்ரைனோடு போர் மூளும் வாய்ப்பில்லை: ரஷ்ய அதிபர் அறிவிப்பு

உக்ரைனோடு போர் மூளும் வாய்ப்பு இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இவ்வாறு கூறியுள்ள புடின், கிரைமியா பிராந்திய மக்களின் முடிவின் படி அப்பகுதி ரஷ்யாவோடு இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், சர்வதேச சமூகம் அதை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நிலவும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு மின்ஸ்க்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டை சரிவர செயல்படுத்துவது அவசியம் என்றும் இது தொடர்பாக மற்றொரு முறை ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட் நாடுகளுடன் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் கீவில் நடந்த போராட்டத்தின் போது நூறு பேர் வரை கொல்லப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் அதிபர் கூறியிருப்பது அர்த்தமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை