நாடாளுமன்ற தேர்தல்- 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நாடாளுமன்ற தேர்தல் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: தமிழகத்தில் ஏப்ரல் 18ந் தேதி நடக்கிறது!

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி  முதல் ஏழு கட்டமாக நடத்தப்படும்' என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. கூடவே 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்களும் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டில்லியில்  வெளியிட்டு, அவர் கூறியதாவது: 

நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 90 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர்; இதற்காக 10 லட்சம் ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். கடந்த 2014  தேர்தலின்போது ஒன்பது லட்சம் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11; இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18; மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல்  23; நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29; ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6; ஆறாம் கட்ட தேர்தல் மே 12; ஏழாம் கட்ட தேர்தல் மே 19 தேதிகளில் நடக்கும். அனைத்து தொகுதிகளுக்கும் மே 23- ந் தேதி ஓட்டு எண்ணப்படும்.

முதல் கட்ட தேர்தலில் 91, இரண்டாம் கட்டத்தில் 97, மூன்றாம் கட்டத்தில் 115, நான்காம் கட்டத்தில் 71, ஐந்தாம் கட்டத்தில் 51, ஆறாம் கட்டத்தில் 59, ஏழாம் கட்டத்தில் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கும். ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல் தற்போது நடக்காது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும். இந்த தேர்தலுடன் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு, இடைத் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடன் அமலுக்கு வருகின்றன.  சமூக வலைத்தளங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட முன்சான்று பெறப்பட வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை