மொகாலியில் ஆஸி. மிரட்டல் வெற்றி எனக்கு வார்த்தைகளே வரவில்லை: 84 ரன்களை குவித்த ஆஷ்டன் டர்னர் பரவசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மொகாலியில் ஆஸி. மிரட்டல் வெற்றி எனக்கு வார்த்தைகளே வரவில்லை: 84 ரன்களை குவித்த ஆஷ்டன் டர்னர் பரவசம்

மொகாலி: ‘எனக்கு வார்த்தைகளே வரவில்லை. இந்த மைதானத்தை நான் தலைகீழாக திருப்பி விட்டேன்’ என்று ஆஸ்திரேலிய அணியின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் ஆஷ்டன் டர்னர் பரவசமாக பேட்டியளித்தார்.

43 பந்துகளில் 84 ரன்களை குவித்து, அணிக்கு வெற்றி தேடித்தந்த டர்னர், நேற்று ஆட்டநாயகனாக முடிசூட்டப்பட்டார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓபனர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டுக்கு 31 ரன்களில் 193 ரன்களை குவித்தார்கள்.

92 பந்துகளில் 95 ரன்களை (7பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ரோஹித் ஷர்மா விளாசினார். 115 பந்துகளில் 143 ரன்களை (18 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) குவித்து, ஷிகர் தவானும் தன் பங்கிற்கு ஆஸி.

பவுலிங்கை சிதறடித்தார்.
லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் ஓரளவு கை கொடுக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை குவித்தது.

ஆஸி. பவுலர்களில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்றாலும் 10 ஓவர்களில் 70 ரன்களை வாரிக் கொடுத்தார்.



359 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸி. அணி, துவக்கத்தில் 3. 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் என்று தடுமாறத்தான் செய்தது.

ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த க்வாஜாவும், ஹேண்ட்ஸ்கோம்பும் 192 ரன்களை குவித்து, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார்கள். க்வாஜா 91 ரன்களும், ஹேண்ஸ்கோம்ப் 117 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த பின்னரும், ஆஸி.

அணியின் வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருந்தது.

4வது விக்கெட்டாக மேக்ஸ்வெல் வீழ்ந்ததும், களத்தில் இறங்கிய ஆஷ்டன் டர்னர், சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினார். 43 பந்துகளில் 84 ரன்களை குவித்து (6 சிக்சர், 5 பவுண்டரி) இந்திய வீரர்களின் பவுலிங்கை கேலிக்கூத்தாக்கி விட்டார்.

47. 5 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை எடுத்து, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்று விட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் 2-2 என சமநிலையில் உள்ளன.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி வரும் 13ம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ளது.

ஆட்ட நாயகனாக ஆஷ்டன் டர்னர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு இது 2வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் அவர் கூறியதாவது: எனக்கு வார்த்தைகளே வரவில்லை.

இந்த மைதானத்தை நான் தலைகீழாக திருப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். ஸ்டானிஸ்தான் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருந்தார்.

அவரது வலதுகை கட்டை விரலில் சிறிய காயம் உள்ளது. இருப்பினும் அவர்தான் ஆடுவார் என்றே நான் நினைத்திருந்தேன்.

ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக அணியில் என்னை சேர்த்தனர். இருப்பினும் இந்தப் போட்டியில் நான் நிச்சயம் ஆடுவேன் என்று முதலில் இருந்தே எனக்கு நம்பிக்கை இருந்தது.

அதே போல் கடைசி நேரத்தில் நான் அழைக்கப்பட்டேன்.

மிகவும் நம்பிக்கையுடன்தான் களத்தில் இறங்கினேன்.

எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய அணியின் வீரர்கள் நன்றாகத்தான் ஆடினார்கள்.

நல்ல இலக்கை கொடுத்தனர். ஹெய்டாஸ்தான் (மேத்யூ ெஹய்டன்) கிரேட்.

வலைப்பயிற்சியில் என்னுடன் அதிக நேரம் செலவு செய்தார். பேட்டிங் நுணுக்கங்களை கற்றுத் தந்தார்.

அவர் மிகச் சிறந்த வீரர். ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வதில் அவருக்கு நிகர் இல்லை.


ஹைதராபாத் போட்டியின் போது, தனது தொப்பியை அவர் எனக்கு கொடுத்து அனுப்பினார். அவரது ஆலோசனைகளை பின்பற்றியே இந்திய வீரர்களில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டேன்.

இந்த வெற்றி எனக்கு மனநிறைவை தந்திருக்கிறது.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை