அபார வெற்றி மூலம் தொடரைச் சமன் செய்தது அவுஸ்திரேலிய அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
அபார வெற்றி மூலம் தொடரைச் சமன் செய்தது அவுஸ்திரேலிய அணி!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் தொடரை வெற்றிகொண்டதன் மூலம் அவுஸ்திரேலிய அணி தொடரை 2:2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
 
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 358 ஓட்டங்களை குவித்தது.
 
மொகாலியில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி ரேனரின் அதிரடி ஆட்டத்தினால் தனது வெற்றியைப் பதிவு செய்தது.
 
359 என்ற இமாலய இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி தனது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது. ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கிய அணித் தலைவர் பின்ச் டக்கவுட் முறையிலும், ஷோன் மர்ஸ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 12 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.
 
44.2 ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை கடந்தநிலையில், ரேனர் ஒரு நான்கு ஓட்டத்தை எடுத்துத் தனது அரைச் சதத்தினைப் பெற்றார்.
 
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு 30 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுக்கவேண்டியிருந்த நிலையில், ரேனர் மற்றும் அலெக்ஸ் கரி ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் வெற்றிவாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்குச் சாதகமாக அமைந்தது.
 
இறுதியில், அவுஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 359 ஓட்டங்களைப் பெற்றுத் தனது வெற்றியைப் பதிவு செய்தது.

மூலக்கதை