ஹன்சிகா படத்தில் சிம்பு...?

PARIS TAMIL  PARIS TAMIL
ஹன்சிகா படத்தில் சிம்பு...?

 சிம்பு - ஹன்சிகா இருவரும் வேட்டை மன்னன் படத்தில் தான் முதலில் இணைந்தனர். ஆனால் அந்தப்படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பிறகு வாலு படத்தில் நடித்தார்கள். அப்போது இருவரும் காதலித்தனர், திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த காதல் முறிந்துபோனது.

 
இந்தநிலையில, தற்போது ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் 50வது படமான மஹாவில், சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி இயக்குனர் ஜமீல் கூறியிருப்பதாவது : மஹா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை, அரைமணி நேரம் வரக்கூடிய கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார்.
 
இந்த கேரக்டரில் முதலில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஹன்சிகா சொன்னார். ஆனால் என்னைவிட சிம்பு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரிடம் பேசினேன், ஒப்புக் கொண்டார். அந்த வகையில், சிம்பு இதுவரை நடித்திராத வேடம் மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கு மறக்க முடியாத கேரக்டராகவும் இந்த படம் அமையும் என்கிறார்.
 

மூலக்கதை