சொந்த ஊரில் விளையாட்டு மைதான பார்வைக் கூடத்தை திறக்க மறுத்த தோனி!

PARIS TAMIL  PARIS TAMIL
சொந்த ஊரில் விளையாட்டு மைதான பார்வைக் கூடத்தை திறக்க மறுத்த தோனி!

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தோனி தற்போது களத்தில் இருக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.  போட்டிகளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளின் போது தகுந்த ஆலோசனைகளை வழங்கி அணி உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

 
இந்த நிலையில், மஹேந்திர சிங் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் அவரை கௌரவிக்கும் வகையில் அங்கு உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பார்வைக் கூடத்திற்கு எம்.எஸ்.தோனி பெவிலியன் என்று பெயரை சூட்ட தீர்மானிக்கப்பட்டது.
 
அதன்படி, தோனியின் பெயா் சூட்டப்பட்டுள்ள பெவிலியனை திறந்து வைக்க அவருக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. எம்.எஸ். தோனி பெவிலியன் பார்வைக் கூடத்தை திறந்து வைக்க ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தோனிக்கு அழைப்பு விடுத்தனா்.
 
ஆனால், அவர் இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிடார். இந்த மறுப்புக்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். அதாவது, நானே அந்த கேலரியை திறந்து வைத்தால் சொந்த ஊரில் அந்நியனாக நினைக்க தோன்றும் என தோனி கூறியுள்ளாராம்.

மூலக்கதை