இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் :

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் :

பெண்களில் முதல் கல்வெட்டு ஆய்வாளர் "மார்க்ஸிய காந்தி"   தொலைக்காட்சியில் உரையாற்றினார்.  திரு.வி.க தான் இவருக்கு இப்பெயரை வைத்துள்ளதாகப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இவர் நமது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவிற்கு சமீபத்தில் ஏறக்குறைய 90,000 மதிப்புள்ள புத்தக அலமாரிகளைக் கொடுத்து உதவியுள்ளார்.

1973 இலேயே 30 , 40 கி.மீட்டர் தொலைவு சைக்கிளில் சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 60 % கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பெரும் பகுதி தஞ்சை மாவட்டத்திலேயே இருக்கின்றன. அன்றைய கால லீகல் டாக்குமென்ட்ஸ் தான் கல்வெட்டுகள் என்கிறார் .

கோவில் என்பது ஒரு பொது இடம் , சாமி கும்பிடும் இடம் மட்டுமல்ல , எல்லோரும் சென்று ஊர் செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு திறந்த வெளிப் புத்தகமாக கல்வெட்டுகள் கோவில் சுவர்களிலே இருக்கும் என்கிறார் .

புகழ் பெற்ற குடவோலை முறையைப் பற்றிய உத்திரமேரூர் கல்வெட்டு பற்றிய சில வேறு தகவல்களைத் தருகிறார்.

அரசாணைகள் மட்டுமே கல்வெட்டு இல்லை , மக்களுக்கும் மன்னனுக்கும் உள்ள தொடர்பைத் தருபவை இவை.

உ. ம் ,ராஜ ராஜ சோழன் ஆட்சியில் 96 ஆடுகளைத் தந்தால் தான் 24 மணி நேரம் எரியும் நந்தா விளக்குக்குத் தர வேண்டும். அரை விளக்கு ஒரு பணிப் பெண்ணுக்குத் தந்துள்ளான்.

ஊர்களின் முழு விபரங்களை கல்வெட்டு தரும் என மிக அழகாகக் குறிப்பிடும் இவரைப் பாராட்டுகிறோம் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு சார்பாக .

-உமாமகேஸ்வரி கோபால் 

மூலக்கதை